சவுதியில் பயணிகளுக்கு நோய்த்தொற்று – அமெரிக்க தீவிர பரிசோதனை

துபாயிலிருந்து கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த விமானத்தில் வந்து இறங்கிய சுமார் 521 பயணிகளில், 100-க்கும் அதிகமான பயணிகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதனை அடுத்து, அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையின் முடிவில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

விமானம் துபாயிலிருந்து கிளம்பும் போது சில பயணிகள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். எனவே, அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பயணிகளுக்கு எப்படி திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து வெளியாகவில்லை. வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், அது பரவக் கூடும் என்றும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சவுதி அரேபியாவில் இருந்து பிலடெல்பியாவிற்கு வந்த இரண்டு விமானங்களில் வந்த பயணிகள் சிலருக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த இரண்டு விமானங்களில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 12 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனினும் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கும் அளவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனாலும், புதன்கிழமை ஏற்பட்ட பீதியைத் தொடர்ந்து அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அனைத்து பயணிகளையும் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற சோதனைகளால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே டெக்சாஸ் மாநிலத்தில் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஹூஸ்டன், டல்லாஸ் மற்று ஹர்லிங்கன் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்த ஒரு பயணிகளில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருப்பதால், அந்த வழித்தடத்தில் சென்ற 4 குறிப்பிட்ட சவுத்வெஸ்ட் விமானங்களில் பயணம் செய்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்

You might also like More from author