சென்னையில் 6 மணி நேரத்தில் 35 மி.மீ. மழைப்பதிவு

சென்னையில் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை மிதமான மழை பெய்து வந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் இரவு முழுவதும் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், அதிகாலை 4.50 முதல் சிறுமழை தூறியது.
இதனால் சென்னை பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. வங்கக்கடலில் வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மிதமான மழை இன்று காலை 8.30 வரை பெய்துள்ளது. இடையில் கனமழையும் பெய்தது.  விட்டு விட்டு பெய்த மழையால் சென்னையில் 6 மணி நேரத்தில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

You might also like More from author