பட்டாசு தயாரிப்பு,விற்பனைக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். விசாரணையின்போது தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

You might also like More from author