இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கம்- சிறிசேனா

இலங்கை அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அரசில் இருந்து சிறிசேனா கட்சி விலகியது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
சிறிசேனாவின் அறிவிப்பை நிராகரித்த ரனில் விக்ரமசிங்கே, தனக்கு போதுமான எண்ணிக்கை இருப்பதாகவும், உடனே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்சே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இலங்கை பாராளுமன்றம் நவம்பர் 16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக சிறிசேனா அறிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

You might also like More from author