நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி

 ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்சி  பெரிய அளவிலான இடத்தை தமிழில் அவரால் பிடிக்க முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்த டாப்சி திடீரென இந்திக்குத் தாவினார். 
அமிதாப்பின் ‘பிங்க்’கால் இந்தியில் அவருக்கு நன்றாகவே வரவேற்புகள் கிடைக்க கிட்டத்தட்ட பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். கைவசம் தற்போது நான்கு இந்திப்படங்களை வைத்துள்ள டாப்சி படங்களை தேர்ந்தெடுக்கும் விதத்தில் முன்னணி இந்தி நடிகைகளுக்கே சவாலாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. டாப்சி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

You might also like More from author