தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கேரளா மற்றும் அதை சுற்றி மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும்.
தென் மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like More from author