தேர்தலை சந்திக்க பயப்படுகிறது அதிமுக- திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டி தேர்தல் நடத்திருக்க வேண்டும். இந்த 2 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுகிறது. அதனால் வராத மழையையும், புயலையும் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான். கோர்ட்டு வலியுறுத்தியும் கூட தேர்தலை தள்ளிவைத்து கொண்டே இருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தீர்ப்பு வந்த பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சி குறித்து நான் சொல்லாத கருத்துக்களை வைத்து சில ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது, அது தவறு. தி.மு.க.வில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்பது கமலின் கருத்து ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்

You might also like More from author