துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடிட கோரியும் துப்பாக்கி சூடு நடத்தி பலரின் உயிரை பலிவாங்கியதோடு 100க்கும் மேற்பட்டவர்களை படுகாயப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை கோரியும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வி.முத்தையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழுவை சேர்ந்த இரா.தங்கராஜ், டி.ராஜேந்திரன், அ.கி.அரசு, எம்.எஸ்.மாதேஸ்வரன், சி.நாராயணசாமி, வட்ட செயலாளர்கள் எஸ்.திருஞானசம்பந்தம், இரா.ருத்ராச்சாரி, பி.ரவிந்திரன், எஸ்.சர்தார், எம்.ஆரோக்கியசாமி, என்.பத்ராசலம், எஸ்.சாதிக்பாஷா, பெ.மணி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து பொதுமக்களுக்கு கேன்சர், தோல்வியாதி, மூச்சுத்திணறல் போன்ற உபாதைகளுக்கு ஆளானதற்கு காரணமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரு. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்
படுகாயமுற்ற போராட்டக்காரர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் கொலை வெறிதாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் போராட்டக்குழு பிரதிநிதிகளை அழைத்து பேசி தூத்துக்குடி பகுதியில் அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமெழுப்பினர்.
அதேபோல திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் பசுமை வழிச்சாலை (சென்னை – சேலம் 8 வழி) எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் அபிராமன், பாசறை பாபு மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

You might also like More from author