பழங்குடியினர் குடியிருப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முயற்சி

பழங்குடியினர் குடியிருப்புகளை நெடுஞ்சாலைத்துறை முயற்சி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு

திருவண்ணாமலை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பழங்குடியின குடியிருப்புகளை அகற்ற நினைக்கும் நெடுஞ்சாலைத்துறையினர் முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை வட்டம் கீழ்அணைக்கரை கிராமத்தில் வசிக்கும் பண்டைய பழங்குடி இருளர் இன மக்கள் குடியிருப்போர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அணைகரை கிராமத்தில் நாங்கள் 300 பேர் அரசு புறம்போக்கு நிலத்தில் 150 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என தவறுதலாக சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரங்கா ரெட்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் அல்லி, ரவிச்சந்திரன், கிருஷ்ணன் ஆகிய 3 பேரின் இடங்களை மட்டுமே அகற்றுமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவில் எங்கள் இடம் காட்டப்படவில்லை.
ஆனால் எங்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. எனவே இதை தடுத்து நிறுத்திட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர். அப்போது தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நடுப்பட்டு கே.ரவி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You might also like More from author