நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்-முதல்வர் பழனிசாமி

நாகர்கோவிலில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி, குமரி மாவட்டத்தில் ரூ13.07 கோடி மதிப்பில் 28 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ31.34 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். மேலும் 14,911 பயனாளிகளுக்கு ரூ67.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்கள், பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. 62 கோடி ரூபாய் செலவில் மீனவர்களுக்கு வயர்லெஸ் சாதனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மும்மதம் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது. மும்மதங்க்ளை சேர்ந்த புராதன வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமரி. மக்களின் வரிப்பணம் மக்களின் நல்வாழ்க்கைக்கு பயன்படும் என்றார் அண்ணா.உலக தரத்திலான கல்வி தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 821 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 118 கோடி புயலின் போது ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
ஓகிபுயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்கள் பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அதிமுக அரசின் மீதான அனைத்து விமர்சனங்களும் அடிப்படை ஆதாரமற்றது. குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ 36 கோடி வழங்கப்பட்டது.
குளச்சலில் ரூ 96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும்.தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது.அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும் – புத்தர் கதையை கூறி முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.கிள்ளியூர், திருவட்டாறு வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும்.ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்து படிப்பு இடங்களை 100லிருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் மாவட்டமாக திகழ்கிறது கன்னியாகுமரி மாவட்டம். 120 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளூர் சிலைக்கு செல்ல கடல் வழிப்பாலம் அமைக்கப்படும்.  விவேகானந்தர் பாறைக்கு செல்ல 2 படகுகள் வாங்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும். எல்லைக்குள் மறுசீரமைப்பு பணி முடிந்தவுடன் நாகர்கோவில் மாநகராட்சி தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

You might also like More from author