பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு கொலு கண்காட்சி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலுகண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி தொடங்கி வைத்தார்.

சிறப்பு கொலு கண்காட்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின்ரூபவ் பூம்புகார் விற்பனை
நிலையம் திருச்சி சிங்காரதோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து
45வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. வழக்கம் போல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 20.10.2018 வரை (ஞாயிறு கிழமை உட்பட) கொலு கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள் கொண்டபள்ளி
பொம்மைகள்,மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள் பளிங்குக்கல், மாக்கல்,நவரத்தின
கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ50 முதல்  25,000ம் வரை இக்கண்காட்சியில் இடம்
பெற்றுள்ளன.இக்கண்காட்சியில்  பைரவர், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள்ரூபவ் வேத மூர்த்திகள்,கார்த்திகைதீபம், கள்ளழகர், கல்யாண ஊர்வலம், கிரிக்கெட், சஞ்சீவி, பெருமாள் ஊர்வலம், நவ கண்ணிகள்,
பானைகிரு~;ணன், தசாவதாரம், அ~;டலெட்சுமி, கயிலாய மலை, கார்த்திகை பெண்கள், ஸ்ரீரங்கம்,அன்னபூரணிரூபவ்
விநாயகர்,மகாலெட்சுமி வரம், மாயா பஜார், சீனிவாச கல்யாணம், மீனாட்சி கல்யாணம், மும்மூர்த்தி,
ராமர் பட்டாபிN~கம், தாத்தா பாட்டி, பெருமாள் தாயார், ராமர் பாலம், சுக்ரீவர் பட்டாபி,கனகதாரா, முருகர் உபதேசம், கஜேந்திர மோட்~ம், மாங்கனி,கீதா உபதேசம், ஜோதிர்லிங்கம்,வ் பரதநாட்டியம், அசோகவனம், பீ~;மா அம்பு படுக்கை, கனையாழி, பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம்
பெற்றுள்ளன.

சென்ற ஆண்டு கொலுக் கண்காட்சியில் ரூயஅp;பாய் 12 இலட்சம் மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு
ரூபாய் 15 இலட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் காட்சிக்கும்ரூபவ் விற்பனைக்கும் உள்ள பல்வேறு ஊரக மற்றும்நகர்புறத்தில் உள்ள நலிவடைந்த கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருட்கள் தமிழ்நாட்டில் 10 இடங்களில்பூம்புகார் மூலம் கலைத் தொழிலாளர்கள் அழகாக உற்பத்தி செய்வதை விற்பனை செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறுமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் திருமதி.ஆர்.கங்காதேவி மற்றும் ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர்.

You might also like More from author