கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் -திருச்சி மாவட்டஆட்சித் தலைவர்

trichy At the Gram Sabha meeting

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் காந்தி பிறந்த தினமான 02.10.2018
அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் வாக்காளர்களான பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்டஆட்சித் தலைவர் திரு. கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.


இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்திற்கொண்டு தமிழக அரசு நிர்வாகத்தில்
இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக தேவையான நிதி ஒதுக்கீடும் அரசினால் அவ்வப்போது
அளிக்கப்பட்டு வருகிறது.

காந்தி பிறந்த தினமான 02.10.2018 அன்று காலை 11.00 மணிக்கு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம
ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் வாக்காளர்களான அனைத்து மக்களும் கலந்து கொண்டு
தங்கள் ஊராட்சிகளில் கிராம ராஜ்யம் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.கு.இராசாமணிஇ.ஆ.ப.ரூபவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

You might also like More from author