திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் குழந்தை கொடுமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மாணவர்கள் சார்பில் குழந்தை கொடுமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் ,பழைய பேருந்து நிலையத்தில் முனைவர் கார்டர் பிரேம்ராஜ் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பி .எஸ் .சித்ரா கலந்து கொண்டார் .இதில் சைல்டு -லைன் நோடல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ் .தியாகராஜன் கலந்து கொண்டு குழந்தை கொடுமை பற்றிய விழிப்புணர்வு பதாகையை திறந்து வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி 1000 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது

You might also like More from author