இங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் இந்தியாவிடம் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக லண்டனிடம் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த பார்லி கூட்டத் தொடரிலும் மத்திய அரசு கூறி இருந்தது. தற்போது பிரிட்டன் அதிகாரிகளே இதனை உறுதி செய்துள்ளதால் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கேட்கப்பட்டுள்ளது.

2002 ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்களை இந்தியா கொண்டு வர இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய 29 வது நபர் நீரவ் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கோரிக்கையை 9 முறை இங்கிலாந்து நிராகரித்துள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டு, தப்பி சென்ற விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author