வியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் காலமானார்

வியட்நாம் நாட்டின் ராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அந்நாட்டின் அதிபர் ட்ரான் டாய் குவாங். இவர் தனது உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதான அதிபர் ட்ரான் டாய் குவாங் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவிவகித்து வந்தார்.

You might also like More from author