தளபதி விஜய் படத்தில் கதாநாயகி இவரா ?

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர்களுடன், ராதா ரவி, யோகி பாபு, பிரேம் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

தீபாவளியன்று வெளியாகும் சர்கார் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் மீண்டும் அட்லி படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இதற்கு முன்பாக, தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பரத் அண்டே நேனு’ படத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author