டெஸ்ட் தரவரிசையில் விராட்கோலி முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளிகள்) ஒரு புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் தொடருகிறது. தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு புள்ளி மட்டும் சரிந்து இருக்கிறது. மற்றபடி அணிகளின் தரவரிசையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணி (106 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (97 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (76 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (67 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (2 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.

பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (935 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (919 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (835 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (812 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (765 புள்ளிகள்), இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்), இலங்கை வீரர் சன்டிமால் (733 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா (719 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

You might also like More from author