அரசியலில் குதித்தார் விஷால்? கொடி,இயக்கத்தின் பெயரினை அறிவித்தார்

“அணி சேர்வோம், அன்பை விதைப்போம்” என்ற வாசகத்துடன் கூடிய தனது ரசிகர் மன்ற கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஷால். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொடி மற்றும் இயக்கத்தின் பெயரினை அறிவித்தார்.

இயக்கத்தின் பெயர் அறிமுக விழாவில் அவர் பேசியதாவது…

“நிஜ வாழ்வில் நல்லது செய்ய விரும்பும் அனைவரும் அரசியல்வாதிகளே. மக்கள் பிரச்சனையினை நேரில் சந்திது தீர்த்து வைப்பதே அரசியல் ஆகும்.

ரசிகர்கள் மற்றும் தன்நம்பிக்கையே எனது சொத்து. எனக்கு கார் மட்டுமே சொந்தமாக உள்ளது, சொந்த வீடுகூட இல்லை. எனக்கு சொத்த என சொல்லிக்கொள்ள இருப்பது எனது ரசிகர்கள் மட்டுமே. நல்ல ரசிகர்களை பார்க்கும் போது என் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.வீதியில் நடக்கும் பிரச்சணைகளை பார்த்தும் கேட்காமல் விட்டுவிடுபவர் பினத்திற்கு சமம். என தெரிவித்துள்ளார்.

You might also like More from author