தமிழ்ராக்கர்ஸில் வெளியானது விஸ்ரூபம் 2-திரையுலகினர் அதிர்ச்சி

விஸ்வரூபம் 2 இன்று வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸின் பிரபல திருட்டு இணையதளத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. புதிய தமிழ் படங்கள் திரைக்கு வந்த சில நிமிடங்களிலே, இன்னும் சொல்லப்போனால் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி வருகின்றன. 

தமிழ் ராக்கர்சை ஒழிக்க நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், அவருடைய துப்புறிவாளன் திரைப்படத்தையே ஃபுல் ஹெச்டியில் வெளியிட்டு மொத்த திரைதுறையினரையும் தமிழ் ராக்கரஸ் அதிர வைத்தது. தொடர்ந்து, ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தையும் முதல் நாளே இணையதளத்தில் கசிய விட்டது.
 

இந்நிலையில், கமல் நடிப்பில், விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியான நிலையில், இன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அந்த படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விஸ்வரூபம் 2 திரைப்படம் பல்வேறு சட்டசிக்கலுக்கு மத்தியில் வெளிவந்துள் நிலையில், முதல்நாளில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் அதனை திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளதால் திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

You might also like More from author