வாகா எல்லையில் தேசபக்தி முழக்கங்களை உரக்கக்கூறி மகிழ்ச்சி !!

பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாஹா எல்லையில் ஒவ்வொரு நாளும் இந்தியா, பாக்., நாட்டு தேசியக் கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பைக் காணவும், இரு நாட்டு மக்களும் ஆர்வமுடன் கூடுவார்கள். இன்று(ஆக.,15) இந்திய சுதந்திர தினத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண குவிந்தனர்.
கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை உற்சாகமாக கண்டு ரசித்த பொதுமக்கள், தேசபக்தி முழக்கங்களை உரக்கக்கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

You might also like More from author