‘பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?-அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
டெல்லி பொதுப்பணித்துறையில் சமீபத்தில் கட்டிட பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அந்த துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இதனை சுட்டிக்காட்டி ‘பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசு செய்துள்ள நல்ல விஷயங்களை மக்களிடம் மறைக்கும் விதமாக மத்திய அரசு இவ்வாறு செய்கிறது என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடர்பில்லாத வழக்கில் சம்பந்தப்படுத்தி போலீசார் மற்றும் டெல்லி அரசு சதி செய்வதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.