உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்

தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியது.
சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் யூடியூப் சேவை முடங்கிய நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து பழுது சரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து யூடியூப் இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து யூடியூப் அதன் ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி.  எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது

You might also like More from author